Aran Sei

முல்லைப் பெரியாறு விவகாரம்: ‘கூட்டணி கட்சியான சிபிஎம் மூலம் பேச்சு வார்த்தை நடத்துங்கள் – முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 9), டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப்பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தல் படி செய்யவேண்டிய இப்பணியை கேரளா தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியதையே சாதனை போல அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப் போகிறார்?

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா போலி பரிசோதனை – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது

தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பகுதியில் இருந்து கேரள அரசு தன்னிச்சையாக தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டதை வேடிக்கை பார்த்தது போல இதையும் திமுக அரசு வேடிக்கை பார்க்க போகிறதா?

வெறுமனே கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களது கூட்டணி கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வரை தமிழக அமைச்சர்களை அனுப்பி நேரடியாக சந்திக்க வைத்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்