பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்திருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று(நவம்பர் 24), டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ‘தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய திரு. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். (1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 24, 2021
இப்போது ‘குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக’ அவர்கள் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இதேபோல தாங்கள் தான் சிறுபான்மையினரின் காவலன் என்று கூறி, அந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலையையும் இந்த அரசாணையின் மூலம் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிப்பாரா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.