Aran Sei

கோடி கணக்கில் நன்கொடை பெற்ற திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி – ஒரே நாளில் அதிகபட்சமாக 2 கோடி என தகவல்

திருப்பதி தேவஸ்தானம்  தேவஸ்தானம் நடத்தி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி 2 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தொலைக்காட்சி ஒருநாள் நன்கொடையாகப் பெற்ற அதிகபட்ச தொகை இதுவேயாகும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் சமஸ்கிருத, வேத பாடசாலைகளுடன் திருப்பதி தேவஸ்தான கோயில் : அடிக்கல் நாட்டிய துணைநிலை ஆளுநர்

திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி, திருப்பதி வெங்கடாசலபதிக்கு நடக்கும் பூசைகளை நேரடியாக ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சியாகும். இதே போன்று, எஸ்.வி.பி.சி-2 தொலைக்காட்சி தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சிக்கு இந்தியன் கனிமம் மற்றும் கிரானைட் நிறுவனம் 1 கோடி ரூபாயும், பட்டாபி ஆக்ரோ நிறுவனம் 1 கோடி ரூபாயும் காசோலையாக நன்கொடை வழங்கியுள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்