Aran Sei

தேர்தல் முடிவை மாற்ற அதிகாரியை மிரட்டும் ட்ரம்ப் : கமலா ஹாரிஸ் கண்டனம்

credits : the guardian

கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக மாநிலங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளார். ஆனால் பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் தனது (ட்ரம்ப்பின்) தோல்வியை மாற்றியமைக்க அம்மாநிலத்தின் உயர்மட்ட தேர்தல் அதிகாரிக்கு அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுக்கும் ஆடியோவை தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா?

அதில் குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும் ஜார்ஜியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பிராட் ராஃபென்ஸ்ப்பெர்கரிடம் ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க கோரி அவரை புகழ்ந்தும், இகழ்ந்து, மிரட்டியும் உள்ளார் என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் யார் என்பதை ”காலம்தான் முடிவு செய்யும்” – ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப்பினுடைய கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ள ராஃபென்ஸ்ப்பெர்கர் அதிபர் ட்ரம்ப் நியாயமான மற்றும் துல்லியமான தேர்தல் என்பது குறித்து சதி கோட்பாடுகளை (Conspiracy Theories) நம்பி வருவதாக அந்த ஆடியோவில் ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக அதிபர் ஆவாரா ட்ரம்ப்? – நிபுணர்களின் விளக்கம்

அந்த ஆடியோவில் ”ஜார்ஜியா மக்கள் மிகவும் கோபமாக உள்ளனர், நாட்டு மக்களும் கோபமாக உள்ளனர்” என்று கூறியுள்ள ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு ஏதுவாக ”நீங்கள் தேர்தல் முடிவுகளை மறுகணக்கீடு செய்த்தாக கூறுங்கள். அதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா கடவுள் அளித்த வரம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஜார்ஜியாவில் தான் தோல்வி அடையவில்லை என உறுதியாக நம்பிவரும் ட்ரம்ப் “நான் செய்யவேண்டியது இதுதான். நான் 11,780 வாக்குகளைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன். நாங்கள் ஜார்ஜியாவை வென்றுள்ளோம்” என்று ட்ரம்ப் அவரிடம் கூறியுள்ளார்.

அமேரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் ட்ரம்ப் : பைடன் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

இந்த சம்பவம் தொடர்பாக துணை அதிபராக பதவியேற்க இருக்கும் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ட்ரம்ப் விரக்தியின் உச்சத்தில் இது போன்று செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்