அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒன்றுகூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தனது மாபெரும் வெற்றி திருடப்பட்டு விட்டதாகவும் பேசியுள்ளார். அதன் அடிப்படையில் மாநிலங்களின் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருக்கும் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது ஆதரவாளர்கள் பக்கபலமாக நிற்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் காவல்துறை பாதுகாப்பையும் மீறி நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இதனால் நாடாளுமன்றதில் நிகழ்ந்த கூட்டம் கலைந்து போக நேரிட்டது. இந்த வன்முறை நிகழ்வு அமெரிக்காவிலும் உலகமெங்கும் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது.
வன்முறையைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட வீடியோவில், வன்முறையாளர்களை பாராட்டி, அவர்களை வீடு திரும்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் அந்த வீடியோவை நீக்கின. டிவிட்டரும் பேஸ்புக்கும் அவரது பக்கங்களை தற்காலிகமாக முடக்கின.
அமெரிக்கா – வன்முறையைத் தூண்டிய அதிபர் டிரம்பை உடனடியாக பதவி நீக்கக் கோரும் எதிர்க்கட்சியினர்
அவரது பதவிக் காலம் இன்னும் 13 நாட்களே இருந்தாலும், டிரம்பை பதவியிலிருந்து நீக்குவது “மிகவும் அவசரமானது. இது உயர் அவசரநிலை” என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் ட்ரம்ப்பினுடைய பக்கத்தின் மீதான தடையை நீக்கினாலும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தடையை மேலும் நீட்டித்துள்ளன.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”கடந்த 24 மணிநேரமாக நடந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள், அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதமிருக்கும் பதவி காலத்தில், அமைதியான மற்றும் சட்டபூர்வமான அதிகார மாற்றத்தை சீர்குலைக்க விரும்புகிறார் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
https://www.facebook.com/4/posts/10112681480907401/
”கேபிடல் கட்டிடத்தில் தனது ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை கண்டனம் செய்வதற்கு பதிலாக அவர்களை மன்னித்து விடும் வகையில் பேசியது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. அவருடைய அந்த அறிக்கைகளை நாங்கள் நேற்று அகற்றினோம், ஏனெனில் அதன் விளைவு – அதன் நோக்கம் – மேலும் வன்முறையைத் தூண்டும் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்
”தேர்தல் முடிவுகளின் சான்றிதழை காங்கிரஸ் அளித்த பிறகு மீதமுள்ள நாட்களும் அமைதியாகவும், நிறுவப்பட்ட ஜனநாயக விதிமுறைகளுக்கு ஏற்பவும் நடப்பதை உறுதி செய்வதே முழு நாட்டிற்குமான முன்னுரிமை” என்று ஃபேஸ்புக் நிறுவனர் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்குகள் முடக்கம் – டிவிட்டர், பேஸ்புக் நடவடிக்கை
”கடந்த பல ஆண்டுகளாக, அதிபர் ட்ரம்ப்பை எங்கள் சொந்த விதிகளுக்கு இணங்க எங்கள் தளத்தை பயன்படுத்த அனுமதித்தோம், சில நேரங்களில் உள்ளடக்கத்தை அகற்றலாம் அல்லது எங்கள் சட்டகங்களை மீறும் போது அவரது பதிவுகளைக் குறிப்பிட்டு காட்டுவோம். ஆனால் தற்போதைய சூழல் அடிப்படையிலேயே வேறுபட்டது, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை போராட்டத்தைத் தூண்டுவதற்கு எங்கள் தளம் பயன்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க கலவரம்: சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க முடியாது – மோடி
”இந்தச் சூழ்நிலையில் ட்ரம்ப் தொடர்ந்து எங்கள் தளங்களை பயன்படுத்த அனுமதித்தால் பெரும்அபாயங்கள் நேரும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் நாங்கள் கொண்டிருக்கும் தடையை காலவரையின்றி நீட்டித்து வருகிறோம் அல்லது குறைந்தபட்சம் அதிகார மாற்றம் முடியும் வரை அடுத்த இரண்டு வாரங்களாவது தடை நீடிக்கும்” என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.