Aran Sei

டிஆர்பி முறைகேடு வழக்கு : பார்க் முன்னாள் அதிகாரி கைது

டிஆர்பி (தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகள்) முறைகேடு தொடர்பாகப் பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் (பார்க்) முன்னாள் முதன்மை இயக்க அதிகாரி (சிஓஒ) ரோமில் ராங்கரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், ஒரு போலி டிஆர்பி மோசடிக் கும்பல், தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்வதாக, மதிப்பீட்டு மீட்டர்களின் மூலமாக டிஆர்பி புள்ளிகளை ஆய்வு செய்யும் ஹன்சா ரிசர்ச் என்ற ஏஜென்சியின் அதிகாரி நிதின் தியோகர், பார்வையாளர் ஒளிபரப்பு ஆய்வு கவுன்சிலிடம் (பார்க்) புகார் அளித்தார்.

டிஆர்பி முறைகேடு வழக்கு – ரிபப்ளிக் டிவி நிர்வாகிக்கு மூன்றே நாளில் ஜாமீன்

அந்தப் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைகாட்சி, இந்த மோசடியில் ஈடுபட்டதாக முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது. ரிபப்ளிக் தொலைகாட்சியின் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள் பணியாளர்கள் என அனைவரும் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மும்பை மாநகரக் காவல்துறை கூறியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, டிஆர்பி புள்ளிகளை அதிகமாக கொண்டிருப்பதாகக் கூறும் ரிபப்ளிக் தொலைக்காட்சி, அதிக விளம்பர விகிதங்களைப் பெறுவதற்காக, மதிப்பீடு மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்து டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்ததாக தெரிவித்தது.

டிஆர்பி முறைகேடு – ரிபப்ளிக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கைது

டிஆர்பி மோசடி வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் (13-12-20) மும்பை குற்றவியல் பிரிவு அதிகாரிகளால் ரிபப்ளிக் தொலைகாட்சியின் முதன்மை செயல் அதிகாரி விகாஸ் கான்சந்தானி கைது செய்ய்ப்பட்டார். நீதிமன்ற காவலில் இருந்த அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கபட்டார்.

‘டி.ஆர்.பி மோசடி’ ரிபப்ளிக் டிவி நிர்வாகிகள் மீது மேலும் ஒரு வழக்கு – மும்பை போலீஸ் அதிரடி

இந்நிலையில் டிஆர்பி முறைகேடு தொடர்பாக பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் (பார்க்) முன்னாள் முதன்மை இயக்க அதிகாரியான (சிஓஒ) ரோமில் ராங்கரியா மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிஆர்பி வழக்கில் ரிபப்ளிக் டிவியைக் காப்பாற்ற முயல்கிறதா யோகி ஆதித்யநாத் அரசாங்கம்?

இந்த (டிஆர்பி முறைகேடு) வழக்கின் விசாரணையின் போது ராம்கரியா முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் ஒரு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டிஆர்பி முறைகேடு வழக்கில் கைது செய்யப்படும் 14-வது நபர் ரோமில் ராங்கரியா என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்