Aran Sei

டிஆர்பி மோசடி – கைதானார் ரிபப்லிக் டிவி மூத்த நிர்வாகி

டிஆர்பி (தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி) மோசடி தொடர்பாக ரிபப்லிக் தொலைக்காட்சியின் விநியோகத் தலைவர் கன்ஷ்யம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று மும்பை குற்றப்பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

டிஆர்பி மோசடி – சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு

 

மேலும், ரிபப்லிக் நெட்ஒர்க்கின்  உதவி துணைத் தலைவராகவும் பதவி வகிக்கும் கன்ஷ்யம் சிங், காலை 7.40 மணியளவில் அவரது இல்லத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

”மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் விசாரித்துள்ளதாக மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாக” தி இந்து குறிப்பிட்டுள்ளது.

“பொறுத்துக் கொள்ள முடியாது” – அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதி மன்றம் கண்டனம்

மதிப்பீட்டு நிறுவனமான ‘பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்’ (பார்க்) டிஆர்பி மோசடி குறித்து ஹன்சா ஆராய்ச்சி குழு மூலம் புகார் அளித்தது. ​​சில தொலைக்காட்சி நிறுவனங்கள் டிஆர்பி எண்களில் மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியபோது போலி டிஆர்பி ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்