Aran Sei

அர்னாப் கோசாமிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கிய நீதிமன்றம் – மார்ச் 5 வரை நடவடிக்கை கூடாது என உத்தரவு

credits : scroll

டிஆர்பி முறைகேடு வழக்கை விசாரித்து வரும் மும்பை உயர் நீதிமன்றம், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஏஆர்ஜி அவுட்லையர் மீடியாவின் (ரிபப்ளிக் தொலைகாட்சி) ஊழியர்கள் மீது, காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு விதித்த இடைக்கால தடையை, மார்ச் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், டிஆர்பி (தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகள்) மோசடிக் கும்பல், தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்வதாக, மதிப்பீட்டு மீட்டர்களின் மூலமாக டிஆர்பி புள்ளிகளை ஆய்வு செய்யும் “ஹன்சா ரிசர்ச்” என்ற நிறுவனத்தின் அதிகாரி நிதின் தியோகர், பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சி கவுன்சிலிடம் (பார்க்) புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்துடிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரிபப்ளிக் டிவியின் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள்,  பணியாளர்கள் அனைவரும் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மும்பை மாநகரக் காவல்துறை கூறியது.

டிஆர்பி முறைகேடு வழக்கு – பார்க் அதிகாரிக்கு அர்னாப் கோசாமி பணம் கொடுத்தது அம்பலம்

மேலும், டிஆர்பி புள்ளிகளை அதிகமாகக் கொண்டிருப்பதாகக் கூறும் ரிபப்ளிக் தொலைக்காட்சி, அதிக விளம்பரங்களை பெறுவதற்காக, மதிப்பீடு மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளுக்கு பணம் கொடுத்து, டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்ததாக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக, தாக்கல் செய்யப்பட்ட 1,400 பக்க குற்றப்பத்திரிகையில், ரிபப்ளிக் நிறுவனத்தின் விநியோகத் தலைவர் கன்ஷ்யம் சிங் மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் அப்ரூவராகி (உண்மையை ஒப்புக்கொள்வது) உள்ளனர்.

அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?

இந்த மோசடியில் தொடர்புள்ளதாக, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரி விகாஸ் கான்சந்தானி  உட்பட13  பேர் மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

ராணுவ ரகசியங்களை முன் கூட்டியே அறிந்திருந்தாரா அர்னாப்? – டிஆர்பி முறைகேட்டில் வெளிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரம்

இந்நிலையில், டிஆர்பி முறைகேடு வழக்கை விசாரித்து வரும் மும்பை காவல்துறையை எதிர்த்து, ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷ் பிடலே ஆகிய அமர்வுக்கு முன், நேற்று (12.02.21) விசாரணைக்கு வந்துள்ளது.

டிஆர்பி வழக்கில் வசமாக சிக்கிய அர்னாப் – பாஜக ஆதரவை பயன்படுத்தி காரியம் சாதித்தது அம்பலம்

அப்போது, ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மும்பை காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அர்னாப் கோஸ்வாமிக்கு எதிரான எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை எனவும், இந்த  வழக்கே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளதாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிஆர்பி மோசடிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார் அர்னாப் – மும்பை போலீஸ்

மகாராஷ்ட்ராவின் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான கபில் சிபல் ”மனுவில் இல்லாத பல ஆவணங்கள் உள்ளன. அவர்கள் வாதங்களைத் தொடங்கினால், அது ஆவணங்களை சாராமல் இருக்க  வேண்டும். மனுவில் இல்லாத பல ஆவணங்கள் இடம் பெற்றுள்ளதால், நானும் சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது” என்று கூறியாதாக தி இந்து தெரிவித்துள்ளது.

ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா தாக்கல் செய்த மனு 103 பக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பி முறைகேடு வழக்கு : பார்க் முன்னாள் அதிகாரி கைது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஏஆர்ஜி அவுட்லையர் மீடியாவின் ஊழியர்கள் மீது, காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, மார்ச் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளதகவும், இந்த வழக்கின் விசாரணை, மார்ச் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்