திரிபுரா மாநிலம் ஹோவை மாவட்டத்தில், கால்நடைகளை கடத்தி வந்ததாக எண்ணி தாக்கப்பட்ட மூவர் மரணமடைந்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
செபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுரா பகுதியைச் சார்ந்த ஜெயத் ஹொசைன், பில்லால் மியா, சைபுல் இஸ்லாம் ஆகிய மூவர் மரணமடைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் கால்நடையோ, உயிரற்ற பொருளோ இல்லை – ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம்
அகர்தலா நோக்கி ஐந்து கால்நடைகளோடு சென்று கொண்டிருந்த வாகனத்தை வடக்கு மஹாராணிபூர் கிராமப்பகுதியில் கிராமத்தினர் மடக்கி பிடித்து தாக்குதலில் ஈடுபட்டதாக அப்பகுதி காவல்கண்கணிப்பாளர் தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், அபாயகரமான ஆயுதங்களால் தாக்கிய கிராமத்தினர், சம்பவஇடத்திலேயே இருவரைக் கொடுரமாக தாக்கியதாகவும், அங்கிருந்த மற்றவர் தப்பித்து ஓடியதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இதனைத்தொடர்ந்து, வேறொரு பகுதியில் மற்றொருவர் பிடிபட்டதால் அவரையும் கிராமத்தினர் தாக்கியதாகவும், விஷயம் அறிந்து இரண்டு சம்பவ இடத்திற்கும் காவல்துறை விரைந்து, அவர்களை மருத்துவமனையில் அனுமத்தித்த போது அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அப்பகுதி காவல்கண்கணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள அம்மாநில சி.பி.எம் கட்சி, கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்த சம்பவதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்வும், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.