Aran Sei

திரிபுரா: பாஜகவினரால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் 150 பேர் தாக்கப்பட்டுள்ளனர் – முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு 

திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பாஜகவைச் ஆதரவு விஷமிகளால் குறைந்தபட்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் 150 தாக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடக் கோரி தேர்தலுக்கு முன்பும் பின்பும் குறிவைக்கப்பட்ட ஆதரவாளர்கள் பட்டியலை ஆளுநர் எஸ்.என். ஆர்யாவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சர்க்கார், “மாநிலம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்மீது கட்டவிழ்த்த முன்னோடியில்லாத வன்முறைகுறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மாநிலத்தின் அரசியலமைப்பு தலைவரான ஆளுநரிடம் தெரிவித்தோம்” என்று கூறியுள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரோலி – திரிபுராவில் குறிவைத்து தாக்கபடுவதாக சிபிஎம் குற்றச்சாட்டு

தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள்குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) சந்தித்து மனு ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு அளித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள்குறித்து முன்னிலைப்படுத்தவும், வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களை டிஜிபி குறைத்து மதிப்பிட்ட முயன்றார். புகார்கள் பதிவு செய்யப்படாவிட்டால் காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பானு சாஹா கூறியுள்ளார்.

திரிபுரா: 4 ஆண்டு பாஜக ஆட்சியில் சிபிஎம் உறுப்பினர்கள் பலர் படுகொலை – முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

டிஜிபியின் நிலைப்பாடுகுறித்து திகைத்துப்போனதாக தெரிவித்துள்ள சர்கார், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி இது போன்ற விசயங்களில் காவல்துறையினர் தானாக முன்வந்து வழக்கு பதியலாம் என்று தெரிவித்துள்ளார்.

“வன்முறையை டிஜிபி கையாண்டதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கத் தவறினால் காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. எனவே காவல்துறை அவ்வாறு செய்வதை எது தடுக்கிறது, “என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலத்தில் உள்ள சூழ்நிலையை சீர்குலைக்க பாஜக விஷமிகளைப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டிய சர்க்கார், திரிபுராவில் “பாசிச ஆட்சியை” எதிர்க்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

திரிபுரா வன்முறை: ‘அனைத்து பிரச்சனைகளுக்கும் முதலமைச்சரே காரணம்’- ஆளும் பாஜக எம்எல்ஏகள் குற்றச்சாட்டு

“வாக்களிப்பு நாளன்று தங்கள் வாக்குகளிக்கும் உரிமைக்காக தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை மீறி வாக்காளர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.,” என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் திரிபுராவில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன, அவற்றில் மூன்று பாஜக மற்றும் ஒரு சி.பி.ஐ (எம்) கைப்பற்றியது.

‘திரிபுராவில் திரிணாமூல் பெண் தலைவர் கைது; கட்சியினர்மீது தாக்குதல்’- பாஜகவின் பாசிச பயங்கரவாதமென சிபிஐ(எம்) கண்டனம்

இருப்பினும், பாஜக செய்தித் தொடர்பாளர் நபேந்து பட்டாச்சார்ஜி, இந்த குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றது” என்று மறுத்தார், “பாஜக வன்முறையை நம்பவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

“கம்யூனிஸ்டுகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

Source: The New Indian Express

தமிழ்நாட்டுல பாஜக செல்வாக்கு இவ்வளவு தான்! ADMK Issue | Annamalai | Thirumavalavan | Maharashtra BJP

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்