Aran Sei

திரிபுராவில் அரசியலமைப்பு நடைமுறையில் இல்லை – முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்கார் குற்றச்சாட்டு

திரிபுராவில் அரசியலமைப்பு நடைமுறையில் இல்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்கார் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் எதிர்கட்சியினர் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை தாக்குதல்கள்குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்தது பிறகு, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

’ஒரு கட்சி, சர்வாதிகார பாசிச ஆட்சி’ நிறுவுவதற்கான ‘ஆய்வகமாக’ திரிபுராவை பாஜக மாற்றி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திரிபுராவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டிய முன்னாள் முதல்வர் – சிபிஎம் சட்டமன்ற உறுப்பினரை பாஜகவினர் தாக்கியதாக புகார்

அண்மையில் செப்டம்பர் 6 ஆம் தேதி, கடாலியாவிற்கு அவர் பயணம் மேற்கொண்டபோது பாஜக உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். இதற்கு முன்பு இதேப் போன்று இரண்டு முறை பாஜக உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

”திரிபுராவில் பாஜக, “ஜனநாயக எண்ணம் கொண்ட, மதசார்பற்ற, அமைதியை விரும்பும் குடிமக்கள்” அனைவரையும் பாஜக தாக்க தொடங்கியுள்ளது. இது போன்ற ஒரு தாக்குதலுக்கு தான் இடது முன்னணியும் உள்ளாகிறது. இது திரிபுராவுடன் தொடர்புடையது மட்டுமல்ல” என மாணிக் சர்கார் தெரிவித்துள்ளார்.

https://www.aransei.com/news/https-www-aransei-com-news-petrol-pumps-closed-in-rajasthan/

இடது முன்னணியைச் சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களுடைய தொகுதிக்கு செல்ல விடாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 6 ஆம் தேதி பேரணியில் பேசுவது தடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய மாணிக் சர்கார். “நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நான் மாநிலத்தின் பல பகுதிகளுக்குச் செல்லும் போதும், என் சொந்த தொகுதிக்கு செல்லும் போது குறைந்தபட்சம் 15 முறையும் தடுக்கப் பட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.

”காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலத்தின் எதிர்கட்சிகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும் இடது முன்னணி, அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவினரால் அதிக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது” என மாணிக் சர்கார் தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தலைமைச் செயலாளர்: நோட்டீஸ் அனுப்பிய இந்திய பிரஸ் கவுன்சில்  

”திரிபுராவில், இந்திய அரசியலமைப்பு நடைமுறையில் இல்லை என்பதை என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.” என அவர் கூறியுள்ளார்.

எதிர்கட்சிகள் மட்டுமல்லாது, ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசுக்கு எதிராக வழக்கு எடுத்து நடத்து வழக்கறிஞர்களும் தாக்கப்படுகின்றனர் என சர்கார் குற்றம்சாட்டினார்.

”கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள முடியாமல் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 35 ஊடகவியலாளர்கள்மீது உடல்ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டும் வழக்குகளை நடத்தும் தைரியமான வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டுள்ளனர்” என மாணிக் சர்கார் கூறியுள்ளார்.

திரிபுராவில் தாக்கப்படும் பத்திரிகையாளர்கள் – தொடரும் போராட்டங்கள்

முன்னதாக, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பாஜகவினர் மேற்கொண்ட தீ வைப்பு சம்பவங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது.

மாநிலம் முழுவதும் உள்ள 44 கட்சி அலுவலகங்கள், கட்சி உறுப்பினர்களின் 67 வீடுகள் மற்றும் கடைகள் இந்த சம்பவத்தில் தீக்கிரையாகின. மேலும் இடது முன்னணி கட்சிகளின் தொண்டர்களும் காயமடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”2018 ஆம் ஆண்டு மார்ச்சில் இருந்து 2021 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில், 662 கட்சி அலுவலகங்கள், 204 வெகுஜன மக்கள் இயக்கங்களின் அலுவலகங்கள், 3363 வீடுகள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் 659 கடைகள், கட்சி உறுப்பினர்களுக்குச் சொந்தமான வாழ்வாதார ஆதரங்களான ரப்பர் மரங்கள், மீன் குளங்கள் ஆகியன பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

Source : The Wire 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்