திரிபுரா மாநிலம் ஹோவை மாவட்டத்தில், கால்நடைகளைக் கடத்தி வந்ததாக எண்ணி மூவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், தாக்குதலுக்குப் பயந்து தப்பி ஓடிய தப்பித்து ஓடிய நான்காவது நபர் மாயமாகியுள்ளதாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 21 அன்று, அகர்தலா நோக்கி ஐந்து கால்நடைகளோடு சென்று கொண்டிருந்த வாகனத்தை வடக்கு மஹாராணிபூர் கிராமப்பகுதியில் கிராமத்தினர் மடக்கி பிடித்து, கால்நடைகளை கடத்திச் சென்றதாக நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்தச் சம்பவத்தின்போது தப்பி ஓடிய நான்காம் நபர் மாயமாகியுள்ளதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று திரிபுரா மாநிலக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் கால்நடையோ, உயிரற்ற பொருளோ இல்லை – ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம்
இந்நிலையில், திரிபுரா மாநில மனித உரிமைகள் ஆணையம் , “இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளதாகவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நீதிதுறை விசாரணை வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர், “கும்பல் கொலை செய்வது போல் தெரியவில்லை ”, ஆனால் மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர், இது விரும்பத்தகாதது” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.