Aran Sei

‘இந்தியாவை தனியாருக்கு விற்கிறார் பிரதமர் மோடி’ – பாஜக சட்டமன்ற உறுப்பினர் விமர்சனம்

credits : op india

பிரதமர் மோடி நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்கிறார் என்றும், எதிர்கட்சிகளின் முகமாக மம்தா பானர்ஜி விளங்குகிறார் என்றும் திரிபுராவைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆஷிஸ் தாஸ் தெரிவித்துள்ளார்.

சுர்மா தனித்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஆஷிஸ் தாஸ் கருத்துக்கு பாஜக இன்னும்  அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாஸ், இந்தப் பயணம் மத ரீதியானதா அல்லது அரசியல் ரீதியானதா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என தெரிவித்திருந்தார்.

லக்கிம்பூர் வன்முறை – அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியிட்ட பாஜக எம்.பி. வருண் காந்தி

பாபானிப்பூர் சட்டமன்ற தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அஷிஸ் தாஸ், நாட்டில் எதிர்கட்சிகளின் ஒருமித்த முகமாக மம்தா பானர்ஜி உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

”மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு மம்தா பானர்ஜியை இரண்டாவது தாயாக மக்கள் பார்க்கின்றனர்.” என அஷிஸ் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

”பாஜக மத்தியிலும், சில மாநிலங்களிலும் எதேச்சதிகார பாணியில் ஆட்சி செய்து வருகிறது” என தெரிவித்த ஆஷிஸ் தாஸ், “பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் ’லஞ்சம் வாங்கமாட்டேன், வாங்க அனுமதிக்க மாட்டேன். நாட்டை விற்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்’ என வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், இன்று அவரின் வார்த்தைகள் அனைத்தும் ஒரு நகைச்சுவை ஆகிவிட்டது. அரசின் அனைத்து சொத்துக்களும் தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.

‘1300 கோடி சொத்துக்களை 500 கோடிக்கு அதானியிடம் விற்ற ஒன்றிய அரசு’ – விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிபுரா பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நபேந்து பட்டாச்சார்ஜி, இந்த விவகாரத்தைக் கட்சியின் மூத்த தலைவர்கள் கவனித்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஆஷிஸ் தாஸ் மற்றும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் (சுதீப் ராய் பர்மன், ஆசிஷ் குமார் சாஹா, திபா சந்திர ஹ்ராங்க்கால் மற்றும் புர்பா மோகன்) சில நாட்களுக்கு முன்பு திரிபுரா பாஜகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதிக்க அகர்தலாவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்