Aran Sei

முத்தலாக் சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்கலாம் – உச்சநீதிமன்றம்

credits : the indian express

முத்தலாக் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு, முன் ஜாமீன் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட பெண் ஒருவர், தன்னுடைய மாமியார் கொடுமைப்படுத்தியதாக காவல்துறையில் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து பெண்ணின் மாமியார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக் மூலம் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வது, முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகளுக்கான பாதுகாப்பு) சட்டம் 2019, பிரிவு 3-ன் கீழ் சட்ட விரோதமாகும். அவ்வாறு செய்பவருக்கு இந்தச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் – வரலாறு படைக்கும் பெண்கள்

இதையடுத்து அந்த பெண்னின் மாமியார், கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தை பெண்களும் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆரிஃபா ஜோஹரி

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு (நீதிபதி இந்து மல்ஹோதரா, நீதிபதி இந்திரா பானர்ஜி) முன் விசாரணைக்கு வந்தது.

“போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள்” – விவசாயிகள் எதிர்பார்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்ணினுடைய கணவர் செய்த குற்றத்திற்கு அவருடைய உறவினர்களை குற்றம் சுமத்த முடியாது என தெரிவித்துள்ளதாக தி ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

’சிஏஏ போராட்டம் தொடரும்’: டைம்ஸ் இதழில் இடம்பெற்ற பில்கிஸ் பாட்டி

மேலும் “இதை ஆய்வு செய்கையில், பெண்ணினுடைய மாமியாரை முத்தலாக் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் இந்த குற்றமே இஸ்லாமிய ஆண் ஒருவரால் தான் செய்ய முடியும்” எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்து அந்த பெண்ணின் மாமியார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்