Aran Sei

இலங்கை துறைமுகம் அதானியிடம் வழங்கப்படாது : தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த இலங்கை அரசு

credits : newsfirst

லங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) மேம்படுத்துவதற்கு இலங்கை , ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் போட்டுக்கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி மூன்று நாடுகளும் செயல்படுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம், இலங்கை அரசின் கீழ் செயல்படும் இலங்கை துறைமுக ஆணையம் (SLPA), கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முந்தைய சிறிசேனா அரசு போட்டுக்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 சதவீத பங்குகளையும் இலங்கை அரசு 51 சதவீத பங்குகளையும் வைத்துக் கொள்ளும்.

`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து அரசுக்கு அழுத்தம் தந்து வந்தனர். இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தை 23 தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்த்து வருகின்றனர்.

கொடூரமாகத் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் – பின்னணியில் அதானியா? போதைக் கும்பலா?

இந்த ஒப்பந்தம் கொழும்பு துறைமுகத்தின் முக்கிய சரக்கு முனையத்தை ”அதானிக்கு” விற்பதாகும் என குற்றம் சாட்டிய தொழிற்சங்கங்கள். இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், துறைமுகம் 100 சதவீதம் அரசின் சொத்தாக இருக்க வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் : சிபிஎம் புதிய அறிவிப்பு

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது இந்தியாவுடன் நடக்கும் வணிகத்தில் 70% பாதிப்பை ஏற்படுத்தும் என கூறி வந்த ராஜபக்ஷேவின் அரசு, தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டத்திற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அரசின் கீழ் செயல்படும் இலங்கை துறைமுக ஆணையமே கையாளும் என அறிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள இந்திய அரசு 2019 ஆம் ஆண்டு மே மாதம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

விமான நிலைய தனியார் மயமாக்கலில் அதானி ஆதிக்கம் – மத்திய அரசு உடந்தையா?

மேலும், இந்தியா, இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், மூன்று நாடுகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வின் அடிப்படையிலும் அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்