Aran Sei

நீதிபதியை விமர்சித்த மஹுவாவுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் – ‘பெண்கள் தினம் முடிந்தது’ என மஹுவா கருத்து

கடந்த மாதம்  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி  தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக, திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, பிப்ரவரி 10 ஆம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான மனு – மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த நோட்டீஸிற்கு மார்ச் 25 ஆம் தேதிக்குள் பதிலிளிக்க, மொய்த்ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மொய்த்ரா, “பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி பற்றி, நாடாளுமன்றத்தில் உண்மையை பேசியதற்காக எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பெண்கள் தினத்தை முடிவுக்குக் கொண்டு வர என்ன சிறந்த வழி. வெளிப்படையாக ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியதற்கு வெகுமதியாக அவருக்கு மாநிலங்களவையில் இடம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது! இந்த மரியாதைக்கு கடவுளுக்கு நன்றி!” என்று கூறியுள்ளார்.

ஜக்கியின் காவிரி அழைக்கிறது திட்டம் அரசின் திட்டமா ? – கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

மொய்த்ராவின் கருத்துக்கள், பாராளுமன்ற நெறிமுறைகளை அவமதிப்பதாக உள்ளது என செய்தியாளர்களிடம் கூறியுள்ள துபே, “பாராளுமன்றத்தின் பாதுகாப்பைப் (பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை) பயன்படுத்தி, யாருக்கும் எதிராக எதையும் கூறி விட்டு வெளியேறலாம் என்று உறுப்பினர்கள் நம்புகின்றனர். இந்த கருத்து மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்