Aran Sei

‘திரிபுராவில் தொடர்கதையாகும் வன்முறைகள்’ – அமித்ஷா அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணாமூல் எம்பிகள்

பாஜக ஆளும் திரிபுராவில் தங்கள் கட்சித் தொண்டர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலைக் கண்டித்து 12க்கும் மேற்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று(நவம்பர் 22), போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்களின் இக்குழுவில் டெரெக் ஓ பிரையன், சுகேந்து சேகர் ராய், கல்யாண் பானர்ஜி, சௌகதா ராய், டோலா சென் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

விவசாயிகளை காலிஸ்தான்களுடன் ஒப்பிட்ட கங்கனா – குருத்வாரா நிர்வாகக் குழு எதிர்ப்பு

முன்னதாக, திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடப்பதாகக் கூறி, இந்த விவகாரத்தை டெல்லிக்கு எடுத்துச் செல்ல  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளது. ஆனால், சந்திப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் பாஜக ஈடுபாட்டு வருவதாக குற்றஞ்சாட்டி, நேற்று முன்தினம்(நவம்பர் 20), இரவு, பாஜகவைச் சேர்ந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் கலந்துக்கொண்ட கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சயோனி கோஷ் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் கூட்டத்திற்கு இடையூறு செய்ததாக கூறப்பட்டதோடு, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், சயோனி கோஷை திரிபுரா காவல்துறை கைது செய்தது.

கைதுக்கு பின் சயோனி கோஷ் கொண்டு வரப்பட்ட கிழக்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு வெளியே பாஜக தொண்டர்களால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்