Aran Sei

‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்

டைபெற்றுக்கொண்டிருக்கிற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சட்டங்களை நிறைவேற்றுகிறார்களா அல்லது மசாலா பூரி செய்கிறார்களா என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 2), டெரெக் ஓ பிரையன் தனது டிவிட்டர் பக்கத்தில், “முதல் 10 நாட்களில், மோடி-ஷா வேகத்தால், 12 மசோதாக்களை சராசரியாக ஒரு மசோதாவுக்கு ஏழு நிமிடங்கள் என்ற விதத்தில் நிறைவேற்றியுள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டங்களை நிறைவேற்றுகிறார்களா அல்லது மசாலா பூரி செய்கிறார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் கிராஃபிக் பட்டியலை இணைத்துள்ளார். அப்பட்டியலில் உள்ள தரவுகளின்படி, ஒவ்வொரு மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேங்காய் மேம்பாட்டு வாரிய மசோதாவானது ஒரு நிமிடத்தில் நிறைவேறியிருக்கிறது. இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய மசோதானது 14 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்