Aran Sei

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்

த்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு விளம்பரங்களில், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்று இருப்பது தேர்தல்  விதிமுறை மீறல் என, தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

தேர்தல் அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், பாஜக அரசு மேற்கு வங்கத்தில் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றும், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில், அரசின் விளம்பரங்கள் மற்றும் திட்டங்களின் பதாகைகளில் இருக்கு மோடியின் புகைப்படத்தை, தேர்தல் ஆணையம் தலையிட்டு நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘பாஜக, உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி’ எனக் கூறும் ஆய்வறிக்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி

“பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பரப்புரையாளராக இருக்கிறார். ஒரு அரசியல்வாதியாக, பேரணிகளின்போது அவர் தனது கட்சிக்கு ஆதரவைக் கோருகிறார். இந்தச் சூழ்நிலையில், தடுப்பூசி சான்றிதழ்களில் அவரது புகைப்படத்தைப் பயன்படுத்துவது வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு ஒத்ததாகும் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“பெட்ரோல் பங்குகளில் மத்திய திட்டங்களை ஊக்குவிக்கும் பதாகைகளில் இருக்கும் மோடியின் புகைப்படத்தை அகற்ற தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கோரியுள்ளோம்” என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி – கலவரம் நடைபெற்ற வார்டை கைப்பற்றிய காங்கிரஸ்

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், இது “ஆதாரமற்றது” என்றும், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

“தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் ஒரு அரசாங்கத் திட்டம் தொடங்கினால், அது அதே வடிவத்தில் தொடரலாம். பெட்ரோல் பங்குகளின் பதாகைகள் மத்திய அரசின்  பல நலத் திட்டங்களை விளம்பரப்படுத்துகின்றன. இவை தனியார் நிலத்தில் வைக்கப்படுகின்றன” என்று கூறியுள்ள கோஷ், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்