Aran Sei

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் திரிணாமுல் காங்கிரஸ் –  ஊழல் வழக்கில் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு

credits : pti

மேற்கு வங்கத்தில் பரப்பரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

நிறவெறியால் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு 200 கோடி இழப்பீடு: கறுப்பினத்தவரின் மரணம் இனி கேட்பாரற்று கடந்து போகாது

இந்நிலையில், ஐகோர் குழும நிறுவனத்தின் போன்ஸி ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு மார்ச் 15 ஆம் தேதி ஆஜராகுமாறு மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், சாரதா நிறுவன நிதி மோசடி தொடர்பான விசாரணைக்கு மார்ச் 18 ஆம் தேதி ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மதன் மித்ராவுக்கு அமலாக்கத் துறையும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் உறவினர்கள் இரண்டு பேருக்கு மத்திய புலனாய்வு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

சாதிமாறி காதலித்ததால் ஒருவர் கொலை – தலையைக் கொய்து பெண்ணின் சகோதரன் வெறிச்செயல்

தேர்தல் சமயத்தில், மத்திய விசாரணை அமைப்பின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியதாக உள்ளது, இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தடம் புரளச் செய்யும் முயற்சி என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்