Aran Sei

பணமதிப்பிழப்பின் 5-ஆம் ஆண்டு: ‘பொருளாதாரமும் சிறுகுறு தொழிற்துறையும் அழிக்கப்பட்ட நாள்’ – திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

ணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சுதந்திர இந்தியாவின் மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்று என்றும் பாஜக தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

2016 ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் தேதி, அன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 அதிக மதிப்புள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?

இந்நிலையில், நேற்று(நவம்பர் 8), இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சவுகதா ராய், “பணமதிப்பிழப்பு முடிவு சுதந்திர இந்தியாவின் மிக மோசமான முடிவுகளில் ஒன்றாகும். இது நமது பொருளாதாரத்தை, குறிப்பாக நடுத்தர மற்றும் சிறுகுறு தொழிற்துறையை அழித்துவிட்டது. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பையே உடைத்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வழியாகதான் நமது பொருளாதாரத்தின் வீழ்ச்சி தொடங்கியது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது கருப்புப் பணத்தையும் பயங்கரவாதத்தையும் கட்டுப்படுத்தும் என்று இலக்குகளை நிர்ணயித்தார்களே. அதை எட்டினோமா? இல்லை என்பதே அதற்கு பதில். மேலும், இது நாட்டில் வேலையின்மை பிரச்சனையை அதிகரித்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் குறைத்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா போலி பரிசோதனை – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று இரவு, மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பகிர்ந்திருந்த பணமதிப்பு இழப்பை கடுமையாக விமர்சிக்கும் ஐந்து ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரையன், “மம்தா பானர்ஜி மட்டுமே இதை சரியான கணித்தார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்நடவடிக்கையானது ஒரு பெரிய ஊழல் என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்