Aran Sei

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

நீங்கள் எங்களை வெளியேற்றலாம். ஆனால், எங்களை மௌனிக்க வைக்க முடியாது என்றும் எங்கள் மக்களுக்காக போராடுவதிலிருந்தும் உண்மையாக போராடுவதிலிருந்தும் நாங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதம் நடத்த இரு அவைகளிலும் எதிர்கட்சிகள்  கோரி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 4), மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் விவாதம் கோரி அமளியில் ஈடுபட்டுள்ளனர்.  திரிணாமூல் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டுள்ளனர்.

இதனையடுத்து,  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார். டோலோ சென், நாடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா செஹத்ரி, அர்பிதா கோஷ், மவுஸும் நூர் ஆகிய ஆறு  திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் நேற்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அபிஷேக் பானர்ஜி, எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான அடக்குமுறையானது பாஜகவின் 56 இன்ச் காட்பாதர் தோல்வியுற்றதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எங்களை வெளியேற்றலாம். ஆனால், எங்களை மௌனிக்க வைக்க முடியாது. எங்கள் மக்களுக்காக போராடுவதிலிருந்தும் உண்மையாக போராடுவதிலிருந்தும் நாங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். எங்கள் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை, நாங்கள் போராடுவோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்