Aran Sei

திரிணாமுல் கட்சியினர் தாக்கியதில் 5 பாஜகவினர் உயிரிழந்ததாக புகார் – விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜகவினர் தாக்கப்பட்டதாகவும் அதனால் 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் : பொது வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

இதுகுறித்து தெரிவித்துள்ள திலீப் கோஷ், “தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 24 மணிநேரம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், பாஜகவினர் 5 பேர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எண்ணற்ற கடைகள் தாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையின் கண்முன்னே வன்முறை சம்பவங்கள் நடந்ததாகவும், எண்ணற்ற பாஜக ஆதரவாளர்கள் இந்தச் சம்பவத்தினால் வீடிழந்துள்ளதாகவும் திலீப் கோஷ் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லமறுத்த இந்து சிறுவன் – தாக்கிய பாஜக தொண்டர்

இந்நிலையில், மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் இந்த வன்முறை சம்பவம்குறித்து மாநில காவல் ஆணையர், கொல்கத்தா நகர காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி, தன் தொண்டர்களை அமைதிக்காகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்