Aran Sei

திருச்சி: பொது அமைதிக்கு குந்தக விளைவித்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு

திருச்சியில் பாஜக மாநகரச் செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் அருகே பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யாவின் கார் மீது, ஒரு தனியார் பேருந்து மோதிய விபத்தில், சூர்யாவின் கார் சேதமடைந்தது.

நுபுர் சர்மா குறித்த உச்சநீதிமன்ற கருத்துக்கள் – பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கருத்து

இதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றை ஜுன் 19 ஆம் தேதி சூர்யா கடத்தி சென்றுவிட்டதாக, அவர் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்தனர்.

சூரியாவின் கைது நடவடிக்கையை கண்டித்து, திருச்சி மாநகர பாஜக செயலாளர் ராஜசேகர், ஒண்டிமுத்து , பரமசிவம், கௌதமன், காளி, பார்த்திபன், நவீன், இல.கண்ணன் உள்ளிட்ட பாஜக-வை சேர்ந்த 47 ஆண்களும், 7 பெண்கள் என 62 பேர் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆய்வாளர் அகிலா கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி முழக்கம் எழுப்பி ரகளை செய்தது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்ததையில் திட்டி மிரட்டியது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் செய்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக பாஜக-வினர் 62 பேர் மீதும் புகார் கொடுத்தார்.

திரிபுரா: பாஜகவினரால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் 150 பேர் தாக்கப்பட்டுள்ளனர் – முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு 

இந்த புகாரின் அடிப்படையில், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில், பாஜக-வினர் மீது 294, 506, 147, 143, 153, 282, 353, 71, உள்ளிட்ட பிணையில் வெளிவரமுடியாத குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: Puthiyathalaimurai

Maharashtra Political Crisis I History of Shiva Sena I Detailed Explanation I Aranse

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்