Aran Sei

பழங்குடி மக்களுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதிய பாஜக தலைவர் – கட்சியிலிருந்து திடீர் விலகல்

ழங்குடியினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குரல் கொடுத்து வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நாடாமன்ற உறுப்பினருமான மன்சுக்  வசாவா, பாஜகவில் இருந்து விலகியுள்ளார் என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவையில் இருந்து பதவி விலகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுகாதார அமைச்சகம், நர்மதா மாவட்டத்தில் உள்ள 121 கிராமங்களை சூழல் உணர்திறன் மண்டலங்களாக அறிவித்ததை ரத்து செய்ய வேண்டுமென அமைச்சர் வசாவா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்

“சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெயரில், பழங்குடி மக்களுக்கு சொந்தமான தனியார் சொத்துக்களில், அரசு அதிகாரிகள் தலையிடுகின்றனர். இது குறித்து நர்மதா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு எந்த விவரமும் சொல்லப்படவில்லை. அதனால் அவர்கள் அவநம்பிக்கையோடும், அச்சத்தோடும் உள்ளனர். உள்ளூர் மக்கள் போராட்டத்திற்கு தயாராகிறார்கள், எதிர்க்கட்சிகளை இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள்” என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வசாவா தெரிவித்தார் என இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீலகிரி பழங்குடிகளிடையே அதிகரித்து வரும் தற்கொலைகள் – இடப்பெயர்வு காரணமா?

இந்நிலையில், டிசம்பர் 28 ஆம் தேதி, குஜராத்தின் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டிலுக்கு எழுதிய கடிதத்தில், “என்னுடைய தவறுகளால் கட்சி பாதிப்படையக் கூடாது என்பதற்காக கட்சியில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ள வசாவா, குறிப்பாக என்ன காரணத்திற்காக கட்சியில் இருந்து விலகுகிறார் என்று தெரிவிக்கவில்லை.

பாஜகவின் செய்தி தொடர்பாளரான பாரத் பாண்டியா, சமூக வலைதளம் மூலம் தங்களுக்கு வசாவாவின் ராஜினாமா கடிதம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ (குஜராத் பாஜக தலைவர்) பாடில் அவரோடு பேசியுள்ளார். அவருக்கு என்ன பிரச்சினை இருந்தாலும், அதை சரி செய்துவிடலாம் என்று உறுதியளித்துள்ளார். வசாவா குஜராத்தை சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்,.அவருக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை சரி செய்து விடுவோம்” என்று தெரிவித்ததாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்