திரைக்கலைஞர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அமேசான், திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம் சார்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ’ஜெய் பீம்’ படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக நேற்று மதுரையில் பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாட்டுடன் வந்து சூர்யாவுக்கும், அவர் நடித்த ’ஜெய் பீம்’ படத்துக்கும் ஆதரவாக கோஷமிட்டனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகள், எலிகளோடு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பை சேர்ந்த 51 பேர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், அமேசான் உள்ளிட்டோர் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறு பரப்பியது; இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது; பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது. உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், அமேசான் உள்ளிட்டோர் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில்
அவதூறு பரப்பியது
இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுஉள்ளிட்ட பிரிவுகளில் வன்னியர் சங்க தலைவர் பு தா அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் pic.twitter.com/KlpIpp28GH
— Balu Kaliyaperumal (@PMKAdvocateBalu) November 23, 2021
இதனை பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.