Aran Sei

சிறையில் மரணமடைந்த பழங்குடி – மாவட்டக் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்த முதலமைச்சர்

த்தியப் பிரதேச மாநிலத்தில்  கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பழங்குடியின சமுகத்தைச் சேர்ந்தவர் காவலிலயே மரணித்தது தொடர்பாக  கார்கோன் மாவட்டக் கண்காணிப்பாளரை பணிநீக்கம்  செய்து  அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “ஏற்கனவே இந்த விவகாரத்தில் நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, இந்த விவகாரத்தை சரிவர கையாளாத கார்கோன் மாவட்டக் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்கிறேன். மேலும், நான்கு காவலர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 24 அன்று கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிஷன் பீல், கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

இந்நிலையில், பிஷன் பீல் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 8 அன்று கார்கோன் மாவட்டத்தின் கரிகுண்டி கிராம மக்கள் பிஸ்டன் காவல்நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, நான்கு காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோன்று, கடந்த ஆகஸ்ட் 26 அன்று நீமுச் மாவட்டப் பகுதியில்   வாகனத்தின் பின்புறம் கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்த  பழங்குடியின சமுகத்தைச் சார்ந்த  கன்ஹையா லால் பீலின்  மகனின் கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்றும்,பீலின் சகோதரர்கள் வீடு கட்டிக்கொள்ள தலா 2 லட்சம் அளிக்கப்படும் என்றும்   முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.

Source: THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்