Aran Sei

`பழங்குடியினரை மதம் மாற்றுவது பொறுத்துக்கொள்ள முடியாது’ : மத்தியப் பிரதேச முதல்வர்

“சேவை என்ற பெயரில் பழங்குடியினரை மதம் மாற்றுவது பொறுத்துக்கொள்ள முடியாது” என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை போபாலில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அவர், சட்டவிரோத மதமாற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். சேவை என்ற பெயரில் மத மாற்றம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவை, அவரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில்  நினைவுகூர்ந்து , “பிர்சா ஒரு ஜெர்மன் கிறிஸ்தவப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். மதமாற்றம் நடப்பதை உணர்ந்து பள்ளியை விட்டு வெளியேறி மீண்டும் மையநீரோட்டத்தில் சேர்ந்தார்.”என்று கூறியுள்ளார்.

“பிர்சா , தனது கலாச்சாரத்தையும் மரபையும் காப்பதற்காகப் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடினார் என்றும் பழங்குடி மக்கள் தங்கள் மரபுகள் தாக்கப்படும்போதெல்லாம் ஒருபோதும் தலைவணங்கியதில்லை, அவர்கள் எப்போதும் திருப்பித் தாக்குவர் என்று சவுகான் கூறியுள்ளார்.

“இன்று முதல், பழங்குடியினர் நல அமைச்சகம் பழங்குடியினர் விவகார அமைச்சகம் என்று அழைக்கப்படும். பழங்குடி மக்களைப் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள வளங்கள் மீதான முதல் உரிமை, ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் என்றும் கூறியுள்ளார்.

`சாம்ராஸ் விடுதிகள்’ மாநிலம் முழுவதும் கட்டப்படும். அங்கு அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த குழந்தைகள் வசிப்பார்கள் என்றும் பழங்குடியினர் விடுதிகளில் 10 விழுக்காடு இடங்கள் மற்ற சமூகங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கும் ஒதுக்கப்படும் என்றும் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்