Aran Sei

‘விநாயகர் சிலைகளை வைத்து எங்கள் பண்பாட்டை சிதைக்க வேண்டாம்’ – சத்தீஸ்கர் பழங்குடியின அமைப்பு வலியுறுத்தல்

ந்து மதப் பண்டிகைக் காலங்களில் இந்து கடவுள்களின் சிலைகளை பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வைக்கக் கூடாது என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி அமைப்பு அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை மேற்கோள் காட்டி வலியுறுத்தியுள்ளது.

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் சுய நிர்ணய அரசியலமைப்பின் கீழ் இயங்க, அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இருந்து 80 கிமீ தூரத்தில் உள்ள ராஜ்நந்துகாவுன் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி அமைப்பான சர்வ் ஆதிவாசி சமாஜ் கோரிக்கை கடிதத்தை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது.

அதில், “பழங்குடியினரான எங்களுக்கு அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையின் கீழ் சமூக மற்றும் பண்பாட்டு பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. இது பழங்குடியினரின் மரபுவழி சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் எங்களுடைய மொழியின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இவை, இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொடர்ச்சியான மத பரப்புரை செயற்பாடுகளால் மோசமாக பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, எங்கள் பாரம்பரிய சடங்குகளும் பண்பாடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐந்தாவது அட்டவணையின் கீழ் வரும் பழங்குடிகளின் பகுதிகளில் விநாயகர் மற்றும் துர்கா சிலைகளை நிறுவுவதை தடுக்க வேண்டும் என்று பழங்குடி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், பழங்குடியின அமைப்பின் கோரிக்கைக்கும் ஐந்தாவது அட்டவணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

“பழங்குடி அமைப்பின் கோரிக்கைக்கும் அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக, சட்டப்பிரிவு 19 (5)-ல் இதற்கு தீர்வுள்ளது.” என்று ஹைதராபாத்தின் நல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி ஆலோசகர் பி.கே.மனிஷ் மேற்கோள்காட்டியுள்ளார்.

சட்டப்பிரிவு 19 (5)-ல், “பொது மக்களின் நலன் கருதி அல்லது பழங்குடி மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான நியாயமான கட்டுப்பாடுகளை வகுக்கும் சட்டத்தை உருவாக்குகிறது.”

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்