Aran Sei

‘தூய்மைப் பணியாளர்களை கண்ணியமான முறையில் நடத்துக’ – சென்னை மாநகராட்சிக்கு சிபிஎம் வேண்டுகோள்

தூய்மைப் பணியாளர்களை கண்ணியமான முறையில் நடத்த  சென்னை மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளுக்காக சுமார் 22500 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் சுமார் 6700 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். 12500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனியார் கான்ட்ராக்டர்கள் மூலம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியே 3500 காண்ட்ராக்ட் தொழிலாளர்களை 4.5.6.8 மண்டலங்களில் ஈடுபடுத்தி வருகிறது. இந்த கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு
மழைக்காலத்திற்கு தரவேண்டிய ரெயின்கோட், தூய்மைப் பணிகளுக்குத் தேவைப்படும் துடைப்பம், கையுறை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை
பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கவில்லை. கொட்டும் மழையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இரவுபகலாக சென்னை மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கூடிய தொழிலாளர்கள் நலனில் எவ்வித அக்கறையும் பெருநகர சென்னை மாநகராட்சி செலுத்தவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக தரவுகள் இல்லை – ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தகவல்

காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு முதன்மை வேலை அளிக்கும் (Principal Employer) பெருநகர சென்னை மாநகராட்சி – ஒரு அரசு நிறுவனமே, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக கொடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பணி சார்ந்த உபகரணங்களை வழங்காமல் வஞ்சிக்க கூடிய வகையில் செயலாற்றுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு நிறுவனமே தான் நியமித்துள்ள கான்ட்ராக்ட் தொழிலாளர்களை சட்டரீதியாக நடத்தாத போது, தூய்மைப் பணியில் 12,500 தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ள ஸ்மித் உபேசர் மற்றும் சென்னை என்விரோ ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலன் சார்ந்து எத்தகைய நிலைப்பாடுகளை எடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, பேரிடர் காலத்தில் மழைநீரில், குப்பையில், சகதியில் நின்று தூய்மைப் பணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எவ்வித காலதாமதமின்றி, சட்டரீதியான பலன்களை பெருநகர சென்னை மாநகராட்சி வழங்க வேண்டும்.

‘பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து

வாழ்வாதார நெருக்கடியில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள காண்ட்ராக்ட் தொழிலாளர்களையே சொந்தமாக துடைப்பம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்னை மாநகரை தூய்மைப்படுத்த வேண்டிய அவலத்தை உருவாக்கிய அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், கான்ட்ராக்ட் தூய்மைப் பணியாளர்கள், தனியார் நிறுவனத்தின் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் ஆகிய அனைவரையும் கண்ணியமான முறையில் நடத்துவதும், தொழிலாளர்களுக்கான சட்டரீதியான பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், அத்தொழிலாளர்களின் தேவை அறிந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முதன்மைப் பணியாக, முன்னுரிமை செபல்பாடக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்