Aran Sei

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தைகளை உணர்வுரீதியாக புரிந்து கொள்ள வேண்டும் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி

பாலியல்  சீண்டலுக்கு  உள்ளான  குழந்தைகள் மற்றும் அவரது  குடும்பத்தினரின் உணர்வுகளை  புரிந்து கொள்ளும் வகையில்  செயல்பட வேண்டுமென தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஹிமா கோலி தெரிவித்துள்ளதாக  தி இந்து  செய்தி  வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மீதான போக்சோ சட்ட வழக்குகளை    விசாரிக்க  இணையவழி  சிறப்பு நீதிமன்றத்தை  துவக்கி வைக்கும்  விழாவின்  போது  நீதிபதி  இவ்வாறு  தெரிவித்துள்ளதாக அந்த  செய்தியில்  குறிப்பிடபட்டுள்ளது.

பணிய மறுக்கும்  விவசாயிகள் – மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் அறிவித்த வேளாண் சங்கங்கள்

மேலும், பாலியல் சீண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கு  நீதி கிடைக்க வேண்டிய அதே வேளையில், குற்றம் புரிந்தவர்களின்  மனநிலையும் மாற்றம்  பெற  வேண்டுமெனவும் அவர்  கூறியுள்ளதாக  தி இந்து  செய்தி  கூறுகிறது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இந்த நிகழ்வின்போது பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட கருவிகள் சட்டம்(Negotiable Instruments (NI) Act)   மீதான  குற்றங்களை விசாரிக்க 8 சிறப்பு  நீதிமன்றங்களை  துவக்கி வைத்துள்ளதாகவும், இதுவரை அந்த சட்டத்தின் கீழ் 31,௦௦௦ வழக்குகள் நிலுவையில் உள்ளதாக  தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஹிமா கோலி  கூறியுள்ளதாகவும் அந்த  செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்