Aran Sei

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியதாக புகார் – 3 காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு

டந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாகக் கைது செய்யப்பட்ட 3 காஷ்மீர் மாணவர்கள் மீது உத்தரபிரதேச காவல்துறை தேசத்துரோக வழக்கின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அர்ஷீத் யூசுப், இனயத் அல்தாப் ஷேக் மற்றும் ஷோகத் அகமது கனாய் ஆகிய 3 பெரும் ஆக்ராவில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தது வருகின்றனர். 2021 அக்டோபர் 24 அன்று நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இவர்கள் கொண்டாடியதாக வலதுசாரி அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

அப்போது இந்த மாணவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளான 66 எப் (சைபர்-தீவிரவாதம்) 124 ஏ (தேசத்துரோகம்), 153 ஏ (பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட இந்த 3 காஷ்மீர் மாணவர்களும் கடந்த 4 மாதங்களாக இன்றுவரையிலும் சிறையில் உள்ளனர். இவர்களின் பிணை மனு மீதான விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்களின் வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்