Aran Sei

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக பதவிவகித்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு- முறைகேடு புகாரை அடுத்து தகவல் ஆணையர் பரிந்துரை

2011 முதல் 2020 ஆம் ஆண்டுவரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பு வகித்த 9 ஆட்சிப்பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கத் தமிழக தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய ஆசிரியர் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படவில்லையென எழுந்த புகாரை அடுத்து மாநில தகவல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

வாக்காளர்களின் ஆதார் தகவலை முறைகேடு செய்ததாக பாஜக மீது புகார்: தேர்தலை தள்ளி வைக்கலாமா என நீதிமன்றம் கேள்வி

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த 2011 முதல் 2020 ஆம் ஆண்டுவரை தலைவர் பொறுப்பு வகித்த ஒன்பது ஆட்சிப்பணியாளர்கள் மீது எழுந்த புகார்கள்குறித்து விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையர் முத்துராஜ், ஆட்சிப்பணியாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப தமிழக தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

டிஆர்பி முறைகேடு வழக்கு: ஆதாரம் இருந்தால் அர்னாப்பை குற்றவாளியாக இணைக்காதது ஏன்? – மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

2011முதல் 2020 ஆண்டுவரை வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்த ககர்லா உஷா, ஜெகந்நாதன், சீனிவாசன், வெங்கடேஷ், லதா, வியூ நாயர் ஆகிய ஒன்பது ஆட்சிபணியாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கத் தமிழக தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

source; the hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்