Aran Sei

‘மற்றவர்களைப் போல கொரோனா எங்களுக்கும் ஆபத்தானதுதான்’ : தனி வார்ட் கேட்கும் ஜார்க்கண்ட் திருநங்கைகள்

கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் மாநில மருத்துவமனைகளில் தங்களுக்கு தனி வார்ட் ஏற்பாடுத்தித் தர வேண்டும் என்று அம்மாநில திருநங்கைகள் கோரியுள்ளனர்.

நேற்று (ஏப்ரல் 12), ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் சட்டசேவைகள் ஆணைய அலுவலகம் முன்பு, சுப்காம்னா என்ற அறக்கட்டளையின் கீழ் அம்மாநிலத்தில் உள்ள திருநங்கைகள் ஒன்றிணைந்து, தங்கள் உரிமைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

திருநங்கை உரிமைக்காகப் போராடிய சமூக ஆர்வலர் ஸ்னேகா மரணம்: விசாரணையில் கேரள காவல்துறை

பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த அமர்ஜீத் கின்னர் கூறுகையில், “இம்மாநிலத்தைச் சேர்ந்த நாங்களே இங்குள்ள ஆண்களுக்கும் பெண்களுக்குமான கொரோனா வார்டுகளில் பிரச்சினைகளின்றி இருக்க முடியவில்லை என்னும்போது, பிற மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும் பெண்களுக்கான வார்டுகளில் சேர்க்கப்படுகிறார்கள். கொரோனா தொற்றானது மற்றவர்களுக்கு எவ்வளவு ஆபத்தானதோ அதேபோலவே எங்களுக்கும் ஆபத்தானதுதான்.” என்று கோரியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில மருத்துவமனைகளில் எங்களுக்கு தனி வார்ட் அல்லது தனியான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், “சில அண்டை மாநிலங்களில் மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கு பிரதியேகமான தனிப் படுக்கைகள் உள்ளன. ஆனால், ஜார்க்கண்டில் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறைகள் கூட இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்