Aran Sei

திருநங்கை உரிமைக்காகப் போராடிய சமூக ஆர்வலர் ஸ்னேகா மரணம்: விசாரணையில் கேரள காவல்துறை

கேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஒரே திருநங்கையான, சமூக ஆர்வலர் ஸ்நேகா தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் தொட்டடாவில் உள்ள சமாஜ்வாடி காலனியில் ஸ்நேகா வசித்து வந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (பிப்பிரவரி 9) நடந்ததாகவும், அவர் வீட்டில் தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், முதற்கட்ட விசாரணையின் முடிவில் ஸ்நேகா தற்கொலைதான் செய்துக்கொண்டார் என்று உறுதியாகியிருந்தாலும், மேலதிக தகவல்கள் அடுத்தக்கட்ட விசாரணைகளுக்கு பின்னரே தெரியவரும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நிலவுடைமை வழக்கின் காரணமாக உயிரிழந்த தலித் தம்பதியினர் – கேரளாவில் துயரம்

தற்கொலை செய்துக்கொண்ட ஸ்நேகா, கேரள உள்ளாட்சி தேர்தலில் கண்ணூர் மாநகராட்சியின் 36 ஆவது வார்டான கிழுன்னாவில் சுயேட்சியாக போட்டியிட்டிருந்தார். கேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் இவர் ஒருவர் மட்டுமே திருநங்கையாகும்.

ஒரு சமூக ஆர்வலரான ஸ்நேகா, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தன்னுடைய காலனியிலும் வார்டிலும் தன்னால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடனேயே, தேர்தல் களத்தில் இறங்கியதாக ஸ்நேகா முன்னார் குறிப்பிட்டிருந்தார்.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

ஸ்நேகாவின் மறைவுக் குறித்து தனது இரங்கலை பகிர்ந்துள்ள சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான விநோத் பய்யடா, “தற்போதைய விவசாயிகளின் போராட்டம் உட்பட்ட அனைத்து மக்கள் போராட்டங்களின் களத்திலும் முன்னால் நிற்பவர் ஸ்நேகா. அவரின் மறைவு துரதிர்ஷ்டவசமானது.” என்று வருத்தம் தெரிவித்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்