Aran Sei

மாற்றுப்பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தாமதம்: அலட்சியமாய் செய்ல்படும் சமூகநலத்துறை – எதிகட்சிகள் குற்றச்சாட்டு

தேசியளவில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான இணையதளம் தொடங்கப்பட்டு 4 மாதங்களை கடந்த நிலையிலும் இதுவரை 277 அடையாள அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என மத்திய சமூகநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 2020 அன்று மத்திய சமூகநலத்துறை அமைச்சகத்தால் மாற்றுப்பாலினத்தவர் நலனுக்காகத் தொடங்கப்பட்ட இந்த இணையத்தின்  சேவை மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றது.

மாற்றுப்பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்- பீகார் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும், இந்த இணையதளம் வழியே மாற்றுப்பாலினத்தவர்கள் அடையாள அட்டையும் சான்றிதழையும் எளிமையாகப் பெற இயலும் என்றும் சமூகநலத்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் மாநிலங்களவையில் மாற்றுப்பாலினத்தவர்களின் நலனுக்கு அரசு என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, இதுவரை 277 அடையாள அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

மாநிலங்களவையில் இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரத்தன் லால் கட்டாரியா, இந்த இணையம் மூலமாக 1915 மாற்றுப்பாலினத்தவர்கள் அடையாள அட்டைக்கேட்டு விண்ணப்பித்ததாகவும் ,அதில் 1695 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து இதுவரை 277 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 220 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 1418 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன என்றும் இணை அமைச்சர் ரத்தன் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுபாலினத்தவர்கள் காவலராக நியமனம் – சத்தீஸ்கர் காவல்துறை முதல்முறையாக நடவடிக்கை

இந்த விவகாரத்தில் சமூகநலத்துறை மெதுவாகச் செயல்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்தத்துறையின் செயலர், “இந்தத் துறை வேகமாகச் செயல்பட்டு வருகிறது, ஆனால் நாங்கள் கணித்ததை விட மெதுவாகச் செயல்படுகிறது ” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து  செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்