மாற்றுப்பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக் கூடாது என உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாப்டே தலைமையிலான அமர்வில் தங்கஜம் சாண்டா சிங் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் மாற்றுப்பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டுமெனவும் இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறியுள்ளது.
மாற்றுபாலினத்தவர்கள் காவலராக நியமனம் – சத்தீஸ்கர் காவல்துறை முதல்முறையாக நடவடிக்கை
தேசிய ரத்தமாற்ற மையம் வெளியிட்டுள்ள ரத்ததான தேர்வு மற்றும் ரத்ததான பரிந்துரை 2017 ன் வழிகாட்டுதலின் படியும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு மையத்தின் அறிக்கையின் படியும் மாற்றுப்பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் எய்ட்ஸ் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
ஆனால், ரத்ததானம் அளிக்கும் முன்பு கொடையாளர், ஹெபடைடிஸ் பி, சி, எய்ட்ஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா எனச் சோதனை நடத்தப்படுத்தப் படுகிறது என்றும் ஆனால் எந்தவித அறிவியல்பூர்வமான முகாந்திரமும் இல்லாமல் இந்த நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறியுள்ளது.
சோனாகச்சி பாலியல் தொழிலாளர்களின் அவல நிலை: கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி
மேலும் மாற்றுப்பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்ககளுக்கு எய்ட்ஸ் அல்லது எச்.ஐ.வி வர அதிக வாய்ப்புள்ளது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ரத்ததானம் செய்ய நிரந்தர தடை விதிப்பது என்பது தீண்டாமை போன்று உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரனோ தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு ரத்தம் கிடைப்பதில் அதிக சிக்கல் இருந்தது என்றும், அவர்களது மாற்றுப்பாலின, ஓரினச் சேர்க்கையாளர், பாலியல் தொழிலாளர் நண்பர்கள் ரத்த தானம் அளிக்க முன்வந்தாலும் விதிகளின் படி அனுமதிக்கப் படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
வேலைக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 280% உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரனோ வைரஸ் தொற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் இந்தக் காலத்தில் முன்பை விட ரத்த தானம் மற்றும் ரத்த பிளாஸ்மா தானத்தின் தேவை அதிகமாகவே உள்ளது என்றும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.