Aran Sei

கொரோனா முன்களப்பணியில் மாற்றுப் பாலினத்தவர்கள் – மஹாராஷ்ட்ரா அரசு நடவடிக்கை

ஹாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் நகரில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் மாற்றுப்பாலினத்தவர்களை ஈடுபடுத்தவுள்ளதாக அந்நகரின் ஆணையர் அஸ்திக் குமார் அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“மாற்றுப்பாலினத்தவர்கள் தங்கள் வாழ்வியலுக்காக பிச்சையெடுத்தலையும், பாலியல் தொழிலையும் மேற்கொள்ள வற்புறுத்தப்படும் சூழல் நிலவும் நிலையில், கொள்கை ரீதியாக அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்புகள் உருவாக்கித்தர கோரிக்கைகள் வலுத்துள்ளன. மேலும் ஊரடங்கு காலத்தில் மாற்றுப்பாலினத்தவர்கள் வாழ்க்கை மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது” என்று மாநகராட்சி ஆணையர் அஸ்திக் குமார், தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தாமதம்: அலட்சியமாய் செய்ல்படும் சமூகநலத்துறை – எதிகட்சிகள் குற்றச்சாட்டு

மேலும், மாற்றுப்பாலினத்தவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் துணையோடு, அவர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பது குறித்த முன்னெடுப்புகள் நடந்து வருகிறது என்றும் அஸ்திக் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்- பீகார் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு மருந்து செலுத்த வரும் மக்களை கட்டுபடுத்தும் பணியில், மாற்று பாலினத்தவரை ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துதல் அதுகுறித்து ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

 

“மாற்றுப்பாலின சகோதர, சகோதரிகள் பொதுசமூகத்திற்குள் கொண்டுவரப்படும் வரை, சமத்துவம் நோக்கிய நமது பயணம் முடிவடைவதில்லை. அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மகராஷ்டிரா அரசு, அதிகளவிலான வேலைவாய்ப்புகளை மாற்றுப்பாலினத்தவர்களுக்கு உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று ஆய்வாளர் வருண் சர்தேஷி கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்