Aran Sei

ட்ராலி டைம்ஸ் – விவசாயிகளின் போராட்டக்களத்தில் உருவான பத்திரிகை

ட்ராலி டைம்ஸ் என்ற பெயரில் வாரம் இருமுறை வரும் பத்திரிக்கை ஒன்றை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கியுள்ளனர். அதில், கார்டூன்கள், கவிதைகள், புகைப்படங்கள், செய்தி அறிக்கைகள், விவசாய சங்க தலைவர்கள் எழுதும் தலையங்கங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன என்று இந்தியா.காம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 2000 பிரதிகள் அடிக்கப்பட்டுள்ள ட்ராலி டைம்ஸ் பத்திரிக்கையில், மொத்தமுள்ள நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் இந்தி மொழியில் அச்சிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டக் களத்தில் சிறுவர்கள் – ஒருபுறம் முழக்கம், மறுபுறம் ஆன்லைன் வகுப்பு

இந்த பத்திரிக்கையை சுர்மீத் மாவி என்ற திரைக்கதை எழுத்தாளர், ஆவணப்பட மற்றும் புகைப்படக் கலைஞர் குர்தீப் சிங் தலிவாலுடன் இணைந்து தொடங்கியுள்ளார்.

நன்றி : amarujala.com

“நான் முதல் நாளிலிருந்து இங்கு இருக்கிறேன். திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் பரவியிருக்கிறார்கள். எல்லோராலும் தினமும் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முடியாது. பேச்சை கேட்ட விவசாயிகளிடம் ஒவ்வொருவராக கேட்டுக்கேட்டு தெரிந்துக்கொள்கிறார்கள். அந்த தேவையை இந்த பத்திரிகை பூர்த்தி செய்யும். மேலும், இந்த பத்திரிக்கையின் வழியாக விவசாயிகள் அறிவுத்திறனையும் வெளிப்படுத்த முடியும்” என்று சுர்மீத் மாவி கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

’காங்கிரஸ் ஆட்சியில் இந்தச் சட்டங்கள் குப்பையில் வீசப்படும்’: ராகுல் காந்தி

“போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முக்கிய ஊடகங்களின் மேல் அவநம்பிக்கையில் உள்ளதால், அவற்றுக்கு மாற்றாக ஒரு பத்திரிக்கை தேவைப்படுகிறது.” என்று குர்தீப் சிங் தலிவா சுட்டிக்காட்டியுள்ளார். முதலில் இந்த திட்டம் குறித்த யோசனை வந்தவுடன், விவசாய தொழிற்சங்கத் தலைவர்களிடமும், விவசாய சட்ட வல்லுநர்களுடனும், விவசாயிகளுடனும் கலந்தாலோசித்துள்ளனர்.

எல்லாவற்றையும் சந்தை செய்யும் என்றால் அரசு எதற்கு? : வீடியோ

“நாங்கள் சமூக வலைதளங்களில் இந்த திட்டம் பற்றி அறிவித்தோம். இது வேகமாக பரவியது. முதலில், நாங்கள் நான்கு பக்கங்களை நிரப்ப முடியுமா என்று கவலையில் இருந்தோம். ஆனால், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்திருக்கின்றன. என்னிடம் மட்டும் குறைந்தது 300 மின்னஞ்சல்கள் உள்ளன. அதில் பல இன்னும் படிக்கப்படாமல் உள்ளன.” என்று தன் மகிழ்ச்சியை தலிவால் வெளிப்படுத்தியுள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

பத்திரிகையின் உள்ளே ஒரு டிராக்டருக்குள் உட்கார்ந்திருக்கும் ஒரு சீக்கியரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதன் தலைப்பில், புரட்சியாளர் பகத்சிங் கூறிய ‘நம் சிந்தனைகளை தீட்டுவதன் வழியாகவே நம் புரட்சியின் வாள் கூர்மைப்படுத்தப்படுகிறது’ என்ற வாக்கியம் அச்சிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்