அலைபேசி ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும் படியான ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
இதன் வழியாக ஓர் ஆண்டிற்கு வாடிக்கையாளர் செய்யும் ரீசார்ஜ்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீ-பெய்டு பிரிவில் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறார்கள். இதை மாதாந்திர அடிப்படையில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ட்ராய், “ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமும் குறைந்தது ஒரு சிறப்பு திட்ட ரீச்சார்ஜ் (ப்ளான் வவுச்சர்), ஒரு சிறப்பு கட்டண ரீச்சார்ஜ் (ஸ்பெஷல் டாரீப் வவுச்சர்) மற்றும் ஒரு காம்போ ரீச்சார்ஜ்ஜையாவது (காம்போ வவுச்சர்) முப்பது நாட்கள் செல்லுபடியாகும் படி வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வுத்தரவின் வழியாக, இனி அலைபேசிக்கான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒரு சிறப்பு திட்ட ரீச்சார்ஜ், ஒரு சிறப்பு கட்டண ரீச்சார்ஜ், ஒரு காம்போ ரீச்சார்ஜ் ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் அதே நாளில் புதுப்பித்துக்கொள்ளும் படி வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்குகிறது.
மேலும், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.