Aran Sei

தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக போராட்டம் – தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக வரும் அக்டோபர் 7 அன்று போராட்டம் நடத்தவுள்ளதாக 1௦ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், அரசின் இந்தக் கொள்கைகள் ‘தேசவிரோதமானது’ ‘அழிவுத்தரக்கூடியது’ என்று சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கங்கத்தினர், தேசிய பணமாக்கல் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி,   அக்டோபர் 7  தேசிய போராட்டம் தினமாகக் கடைபிடித்து மாவட்டங்கள்தோறும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்தத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில், இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், ஹிந்த் மஸ்தூர் சபை, அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம், தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு, சுயதொழில் பெண்கள் சங்கம், அகில இந்திய மைய  தொழிற்சங்க கவுன்சில், தொழிலாளர் முன்னேற்றக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தெரிவித்துள்ள கூட்டமைப்பினர், அடிப்படைக் கட்டமைப்புகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

SOURCE:THE HINDU 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்