Aran Sei

‘நீங்கள் அறுவடைக்கு செல்லுங்கள்; நாங்கள் போராடுகிறோம்’ : விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

Image Credit : thewire.in

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் அறுவடை பணிகளுக்காகத் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், அப்போராட்டம் தொழிற்சங்கங்களின் உதவியுடன் தொடரும் என்றும் அப்போது புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தொழிலாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 3), பஞ்சாப் மாநிலம் லூரியானாவில், வரவுள்ள அறுவடை காலங்களில் விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருது தொடர்பாக, பல்வேறு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்

இதுகுறித்து பேசிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளரும் கிராந்திகாரி கிசான் யூனியனின் தலைவருமான டாக்டர் தர்ஷன் பால், “விவசாயிகளுக்காக பஞ்சாப்பில் ஒரு புதிய கூட்டுக்குழு அமைக்கப்படும். இக்குழுவில் தொடக்கத்தில் இருந்தே விவசாயிகளுக்கு ஆதரவளித்து வரும் அனைத்து விவசாயம் சாரா தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வலர்கள் இடம் பெறுவர். பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பிற வர்த்தக சங்கங்களும் இதில் இடம் பெறும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி எல்லையில் உள்ள போராட்டங்களில் தங்கள் உறுப்பினர்களுடன் பங்கேற்று ஆதரவு தெரிவிப்பதாகவும், சிலர் நிதியுதவி அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘விவசாய சட்டங்களுடன் புதிய தொழிலாளர்கள் சட்டங்களையும் எதிப்போம்’: தொழிலாளர் – விவசாயிகள் இணையும் மகாபஞ்சாயத்து

பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்களின் ஒருவரான ஹர்மீத் சிங் கடியன், “விவசாயிகளை இழிவுபடுத்துவதற்கும், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் பிளவுகளை உண்டாக்கும் பொருட்டும், மத்திய அரசு கடிதங்களை வெளியிட்டு வரும் சூழலில், போராடி வரும் விவசாயிகள் அறுவடைக்காக பஞ்சாபிற்கு திரும்பும் நேரத்தில், போராட்டத்தில் இணைந்துக்கொண்டு அதை தொடர்வதாகத் தொழிற்சங்கங்கள் தானாகவே முன்வந்து உறுதியளித்தது எங்கள் ஆச்சரியம் அளித்தது.” என்று தெரிவித்துள்ளார்.

அப்போது, விவசாய சட்டங்களைப் போன்று தீமை விளைவிக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்