Aran Sei

‘மீண்டும் டிராக்டர்களுடன் டெல்லிக்குள் நுழைவோம்; நாடாளுமன்றத்தில் மண்டி திறப்போம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

மீண்டும் டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவார்கள் என்றும் நாடாளுமன்றத்தில் மண்டி ஒன்று திறக்கப்படும் என்றும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 13), மேற்கு வங்கத் தேர்தலில் முக்கிய போட்டிக்களமாக பார்க்கப்படும் நந்திகிராமில் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகாயத், “நாடாளுமன்றத்தில் புதிதாக மண்டி ஒன்று திறக்கப்படும். அங்கு பயிர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்பனை செய்யப்படும். டிராக்டர்களுடன் விவசாயிகள் மீண்டும் டெல்லிக்குள் நுழைவார்கள். இதற்கான தேதியை சம்யுக்த் மோர்ச்சா அறிவிக்கும். 3.5 லட்சம் டிராக்டர்களும் 25 லட்சம் விவசாயிகளும் ஒன்றுதான்.” என்று கூறியுள்ளார்.

நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்

“விவசாயிகள் தங்கள் பயிர்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாடாளுமன்றத்தில் மண்டி திறப்பதுதான் சிறந்தது என்று நான் கருதுகிறேன். விவசாயி வெளியே இருக்கிறார். வர்த்தகரும் வெளியே இருக்கிறார். நிச்சயமாக வியாபாரமாகும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நந்திகிராம் வாக்காளர்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்