Aran Sei

‘அறிவித்தபடி ட்ராக்டர் பேரணி நடக்கும்’ – விவசாயிகள் சங்கம் உறுதி

வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக் கோரும் போராட்டத்தின் ஓர் ஆண்டு முடிவை கடைப்பிடிக்கும் வகையில், நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது தினமும் 500 விவசாயிகள் அமைதியான முறையில்  டிராக்டர்களில் அணிவகுத்து நாடாளுமன்றத்திற்குச் செல்வார்கள் என்று போராடும் விவசாயிகளின் கூட்டமைப்பு   இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

நவம்பர் 29 டிராக்டர் அணிவகுப்பு தொடரும். ஓராண்டு நிறைவைக் கொண்டாடுவோம். போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று போராடும் விவசாயிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு 3 லட்சம் நிதியுதவி – தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

சம்யுக்தா கிசான் மோட்சாவி தலைவர் குர்னாம் சிங் சாருனி  கூறும்போது, நவம்பர் 26-ம் தேதி காசிபூர்-சிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டமும், நவம்பர் 29-ம் தேதி டிராக்டர் பேரணியும் திட்டமிட்டபடி நடைபெறும். பிரதமர் நேற்று ஒரு பக்க உரையாடலை நடத்தினார். நாங்கள் திருப்தி அடையும் வரை போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார்.

”700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். சட்டத்தை திரும்பப் பெறும் முடிவை அரசு முன்பே எடுத்திருக்கலாம். இன்று நடக்கும் சம்யுக்த் கிசான் மோட்சா  கூட்டத்தில் நாங்கள் கூடி எங்களின் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்” என்று ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

அரசியலோ அரசியல் – காமராசர் ஆட்சியும் இமானுவேல் சேகரன் கொலையும்

குறைந்த பட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் வழங்காத வரையில் போராட்டம் முடிவடையாது. சட்டப்பூர்வமான உத்தரவாதத்தைப் அளிக்காதவரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்