ஹிமாச்சல பிரதேசமாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஷால் நெஹ்ரியலால் அவரது மனைவி துன்புறுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்டக்காவல் கண்காணிப்பாளருக்கு அம்மாநிலப் பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெஹ்ரியலால் அவரது மனைவியைக் கொடுமைப்படுத்தியது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியானதற்கு பின்னர், தன்னிச்சையாக முன்வந்து மாநில பெண்கள் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் டெய்சி தாகூர் தெரிவித்தார்.
அந்தக் காணொளியில், ஹிமாச்சல பிரதேச மாநில அரசு நிர்வாகப்பணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விஷால் நெஹ்ரியலாலின் மனைவி ஓஷின் சர்மா, அவரது கணவர் உடலளவிலும், மனதளவிலும் சித்ரவதைப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மாநில பெண்கள் அமைப்பு எழுதியுள்ளக் கடிதத்தில், கங்ர மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் விமுக்த் ரஞ்சன், இதுகுறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்ப்பிற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான “மெல்லிய கோடு” – பத்ரி ரெய்னா
இதுகுறித்து தெரிவித்துள்ள சர்மா, அவரது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகவும், கல்யாணத்தின்போது 1.20 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி மற்றும் 1 லட்சம் மதிப்புள்ள மோதிரம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.