இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானி ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விஷம் வழங்கப்பட்டதாகக் புகார் எழுந்துள்ளது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் 2017-ம் ஆண்டு, மே 23 அன்று நடைபெற்ற நேர்காணலின் போது, ஆர்சனிக் ட்ரை ஆக்ஸைடு எனப்படும் கொடிய விஷம் வழங்கப்பட்டதாக தபன் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மதிய உணவுக்குப் பிறகு சாப்பிட்ட தோசையுடன் இருந்த சட்னியில் “அபாயகரமான விஷம் கலந்திருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தபன் மிஸ்ரா தற்போது இஸ்ரோவின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார், மேலும் இந்த மாத இறுதியில் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
அவர் முன்னர் அகமதாபாத்தை சேர்ந்த இஸ்ரோவின் தளத்தில் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
https://www.facebook.com/tapan.misra.9/posts/10220113571576070
‘லாங் கெப்ட் சீக்ரெட்’ (நீண்டநாள் ரகசியம்) என்ற தலைப்பில் ஒரு பேஸ்புக் பதிவை அவர் பகிர்ந்துள்ளார். அதில், உள்துறை பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைச் சந்தித்து, ஆர்சனிக் விஷம் குறித்து எச்சரித்ததோடு, சரியான தீர்வில் கவனம் செலுத்த மருத்துவர்களுக்கு உதவினார்கள் என்று தபன் மிஸ்ரா கூறியுள்ளார்.
கடுமையான சுவாச பிரச்சினை, அசாதாரண தோல் வெடிப்புகள், தோல் உதிர்தல் மற்றும் பூஞ்சை தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் எய்ம்ஸ் நிறுவனத்தால் ஆர்சனிக் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூற அவர் மருத்துவ அறிக்கையைச் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “இது ஒரு ரகசிய உளவு தாக்குதல் என்று தோன்றுகிறது. செயற்கை துளை ரேடார் கட்டமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற மிகப் பெரிய இராணுவம் மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஞ்ஞானியை அழிப்பதே இதன் நோக்கம்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிடிஐ உடன் பேசிய தபன் மிஸ்ரா, “இந்திய அரசு இந்தச் சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
தபன் மிஸ்ராவின் குற்றசாட்டுகள் குறித்து இஸ்ரோவிடம் இருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பைடத்தகது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.