Aran Sei

டூல்கிட் வழக்கு: தனது வழக்கில் தானே வாதாட நிகிதா ஜேக்கப் கோரிக்கை – டெல்லி நீதிமன்றம் அனுமதி

டூல்கிட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிகிதா ஜேக்கப்பின் முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க, டெல்லி காவல்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானாவிடம், நிகிதாவின் ஜாமீன் மனு தொடர்பாக விரிவாக பதிலளிக்க அரசு தரப்பு அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கின் விசாரணை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டபவர்களில் ஒருவரான சாந்தனு முலுக்கின் முன்ஜாமீன் மனு  விசாரணை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நிகிதாவிற்காக காணொளி வாயிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரெபெக்கா ஜான், இந்த வழக்கில் நிகிதா தனியாக வாதாட விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சுட்டெரிக்கவுள்ள கோடை – போராட்டக் களத்தில் முன்னேற்பாடுகளை செய்யும் விவசாயிகள்

ரெபெக்கா ஜானின் வாதத்தை ஏற்ற நீதிபதி, நிகிதா மார்ச் 9 ஆம் தேதி வாதாடலாம் எனக் கூறியுள்ள நீதிமன்றம், டெல்லி காவல்துறை தனது பதிலின் நகலை, நிகிதாவிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டதிற்கு சீன வைரஸ்தான் காரணம் – அமைச்சர் அனில்தேஷ்முக் தகவல்

முன்னதாக, பிப்ரவரி 17 ஆம் தேதி நிகிதா ஜேக்கப்பிற்கு முன்று வாரங்கள் முன்ஜாமீன் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பிப்ரவரி 13 ஆம் தேதி பெங்களூரூவில் வைத்து டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த தீஷா ரவிக்கு, டெல்லி நீதிமன்றம் பிப்ரவரி 23 ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க், தனது டிவிட்டரில் பக்கத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்த ஆவணத்தை (டூல்கிட்) பதிவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

கிரெட்டா பதிவிட்ட அந்த டூல்கிட் ஆவணத்தை, தீஷா ரவி பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு முல்க் மீதும் இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்