Aran Sei

கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று – சு.வெங்கடேசன்

ன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதை, கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியவுடன் மாநிலங்களவையும் உடனடியாக இந்த மசோதாவை எடுத்துக்கொண்டு நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான வரம்பை உயர்த்திய தமிழ்நாடு அரசு – நன்றி தெரிவித்த திருமாவளவன்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 19 அமர்வுகளாக டிசம்பர் 23ம் தேதிவரை அவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், விவசாய அமைப்புகள் கடந்த ஓர் ஆண்டாக போராடி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தீவிரமடைந்து வந்தது, உச்ச நீதிமன்றமும் தலையிட்டு இந்த சட்டங்களை நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் மக்களுக்கு உரையாற்றும்போது அறிவித்தார்.

‘விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனு’- தள்ளுபடி செய்து உத்தரவிட உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

இது குறித்து பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுதலை இந்தியாவில் எந்த ஒரு பிரதமருக்கும் மார்பளவு பெருமையோடு சொல்லப்பட்டதில்லை.

எவ்வளவு விரிந்த மார்பு என்பதில் இல்லை ஒரு அரசின் பலம்.

விரிந்து பரந்த இதயமே அரசின் தேவை என்பதை விவசாயிகள் சொல்லிக்கொடுத்துள்ளனர். கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்