Aran Sei

மனிதநேய உணர்வோடு ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி – திருமாவளவன்

னிதநேய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி என தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

சோகனுரில் நடந்த தலித் இளைஞர்கள் இரட்டை படுகொலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திட்டமிட்ட சாதிப்படுகொலை என்று கூறியிருந்தார்.

சமூகநீதி காக்க பங்காற்றிய அறிஞர் வே.ஆனைமுத்து மறைந்தார் – திருமாவளவன் இரங்கல்

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், “இந்தக் கொலை சம்பவம் குடி போதையில் நடந்தது. சாதிய மோதல் காரணமில்லை. திருமாவளவன் போன்றவர்கள் பொய் தகவலைப் பரப்புகின்றனர். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை. அவர் அம்பலமாகிவிட்டார்” என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அன்புமணி ராமதாஸ்சின் கருத்துக்கு எதிராகச் சமூகவலைத்தளங்களில் தங்களின் படிப்பைக் குறிப்பிட்டு பலரும் திருமாவளவன் உடன் நிற்பதாகப் பதிவிட்டிருந்தனர். இது இணையத்தில் அதிவேகமாகவும் பரவியது.

சோகனூர் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 கோடி நிவாரணம் வேண்டும் – அரசிடம் கோரிக்கை விடுத்த திருமாவளவன்

இந்நிலையில் இணையத்தில் உடன் நிற்பதாகப் பதிவிட்ட அனைவர்க்கும் நன்றி தெரிவித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்’ என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம்_நிறைந்த_நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்