Aran Sei

சிறப்பு முகாம்களிலிருந்து விடுக்க வேண்டும் – ஈழத்தமிழர்கள் போராட்டம்

ஈழத்தமிழர்களின் சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டி நடைபெற்ற் போராட்டத்தில் ஒருவர் வயிறை அறுத்துக் கொண்டுள்ளார்.
பூவிருந்தவல்லி ஈழத்தமிழர் சிறப்பு முகாமுக்குள் இருந்த அத்தனைபேரும் 15 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருந்தார்கள் என்றும், அதிகாரிகள்  பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை, சமாதானத் தூது அனுப்பி “உங்களை இதோ அடுத்த மாதமே விடுதலை செய்து விடுகிறோம் என்ற நம்பிக்கை கொடுத்து, போராடிக் கொண்டிருந்தவர்களை போராட்டத்தை கைவிட செய்தார்கள் என்று கூறப்படுகிறது.
அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிக்கான நாட்கள் கடந்துவிட்ட நிலையில் கூறிய எந்த விதமான முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அகதிகளும் பல்வேறு தடங்களுக்கு மத்தியில் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர் என்றும் கடைசியாக அரசின் தரப்பிலிருந்து உயர் பெண் அதிகாரி ஒருவர் (மறுவாழ்வுத் துறை) போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் விடுதலைக்கான முழு நம்பிக்கை கொடுத்து போராட்டத்தை கைவிடும்படி குறிப்பிட்ட சில தினங்களுக்குள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்றும் வாக்குறுதி அளித்து போராட்டத்தைக் கைவிடச் சொல்லியிருக்கிறார் . அவரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
விடுவிக்கிறோம் என்று போராடிக் கொண்டிருந்தவர்களை நம்பவைத்து, போராட்டத்தை கலைக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல், முற்றிலும் கைவிடப் பட்ட நிலையில் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நான்கைந்து நாட்களாக இருவர் எவ்வித உணவும் உட்கொள்ளாமல், போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. ஒருவர் கழுத்தையும், இன்னொருவர் வயிற்றையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்காமல், முழுவதுமாக அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்